search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிலிப்பைன்ஸ் அதிபர்"

    பெண்கள் அழகாக இருப்பதால் தான் கற்பழிப்பு சம்பவம் அதிகமாக நடக்கிறது என பிலிப்பைன்ஸ் அதிபரான ரோட்ரிகோ டியூட்ரெட் பேச்சு சர்ச்சையானது. #RodrigoDuterte #Philippines
    மணிலா:

    பிலிப்பைன்ஸ் அதிபராக ரோட்ரிகோ டியூட்ரெட் பதவி வகிக்கிறார். போதை மருந்து கடத்தலை தடுக்க கடும் நடவடிக்கை மேற்கொண்டார். அதன் விளைவாக ஆயிரக்கணக்கானோர் சுட்டு கொல்லப்பட்டனர்.

    இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அது மட்டுமின்றி இவர் பொது மேடைகளில் பேசும் பேச்சுகளும் பிரச்சினைக்குரியதாக மாறிவிடுகிறது. கடந்த ஆண்டு சிறுமிகள் கற்பழிப்பு குறித்து பேச்சு சர்ச்சைக்குரியதானது.

    அதுபோன்று தற்போதும் இதுபோன்ற சிக்கலில் அவர் மாட்டிக்கொண்டார். இவர் தனது சொந்த ஊரான தவாயோவில் நடந்த விழாவுக்கு சென்று இருந்தார். இதற்கு முன்பு இங்கு இவர் மேயராக பதவி வகித்தார்.

    அந்த விழாவில் பேசும் போது, ‘‘போலீஸ் அறிக்கையின்படி தவாயோ நகரில் பல கற்பழிப்பு வழக்குகள் பதிவாகியுள்ளன. இங்கு பல அழகிய பெண்கள் உள்ளனர். அதனால் தான் இங்கு அதிக அளவில் கற்பழிப்பு சம்பவங்கள் நடக்கின்றன. முதலில் பெண்கள் சம்மதிக்க மாட்டார்கள். வேண்டாம் என்பார்கள், மறுப்பு தெரிவிப்பார்கள். அதனால் தான் கற்பழிப்பு சம்பவம் நடக்கிறது என்று பலமாக சிரித்தபடி ‘ஜோக்’ அடித்தார்.



    இது விழாவில் கலந்து கொண்ட பொதுமக்களை முகம் சுளிக்க வைத்தது. அதிபர் டியூட்ரெட்டின் இப்பேச்சுக்கு மகளிர் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

    செய்தி தொடர்பாளர் இதற்கு விளக்கம் அளித்துள்ளனர். அதிபர் அடித்த இந்த ‘ஜோக்’ கை இவ்வளவு பெரிதுபடுத்துவது ஏன் என்று தெரியவில்லை. இதன்மூலம் கற்பழிப்பு குறித்த ஜோக்குகளை பெண்கள் விரும்பவில்லை என தெரிகிறது என்றார். #RodrigoDuterte #Philippines
    உள் நாட்டு விவகாரத்தில் தலையிட்டால் நரகத்துக்கு செல்ல வேண்டி இருக்கும் என ஐ.நா. அதிகாரிக்கு பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ துதர்தே மிரட்டல் விடுத்துள்ளார். #Philippines #Duterte
    மணிலா:

    பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபர் ரோட்ரிகோ துதர்தே, சர்வாதிகார போக்கு உடையவர். தன்னை எதிர்க்க கூடியவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு பொதுவெளியில் நேரடியாக மிரட்டல் விடுக்கும் மனோபாவம் கொண்டவர்.

    அங்கு சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்த மரியா லூர்தஸ் செரினோ, அதிபர் ரோட்ரிகோ துதர்தேவின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தொடர்ந்து அவருக்கு எதிரான கருத்துகளை தெரிவித்து வந்தார்.

    இதனால் அவரை தன்னுடைய எதிரி என்று கூறிய ரோட்ரிகோ துதர்தே, அவரை தலைமை நீதிபதி பதவியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என வலியுறுத்தினார். இதனைத்தொடர்ந்து கடந்த மாதம், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ஓட்டெடுப்பு நடத்தி மரியா லூர்தஸ் செரினோவை பதவி நீக்கம் செய்தனர். இது குறித்து வேதனை தெரிவித்த பிலிப்பைன்சுக்கான ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பின் மூத்த அதிகாரியான கார்சி-சயான் “ரோட்ரிகோ துதர்தே, மரியா லூர்தஸ் செரினோவுக்கு எதிராக பொதுவெளியில் மிரட்டல்கள் விடுத்ததே, அவர் பதவி நீக்கம் செய்யப்படுவதற்கு முக்கிய காரணம்” என குற்றம் சாட்டினார்.

    இந்நிலையில் ரோட்ரிகோ துதர்தே, நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்து பேசியபோது, தன் மீது கார்சி-சயான் முன்வைத்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்தார்.

    அப்போது அவர் பேசுகையில், “அவரிடம் (கார்சி-சயான்) சொல்லுங்கள், என் நாட்டின் விவகாரங்களில் தலையிட வேண்டாம் என்று, இல்லையென்றால் அவர் நரகத்துக்கு செல்ல வேண்டி இருக்கும்” என கூறினார்.

    மேலும், “அவர் ஒன்றும் சிறப்பான நபர் இல்லை. அவருடைய பதவியை நான் அங்கீகரிக்கவில்லை” என்றும் தெரிவித்தார்.   #Philippines #Duterte #tamilnews 
    ×